விறுவிறுப்பான போலிஸ் க்ரைம் படத்தில் சீரியல் நடிகை!
‘ஜரிகண்டி’ என்ற திரைப்படத்தை தயாரித்த நடிகர் நிதின் சத்யாவின் அடுத்த தயாரிப்பில் வைபவ் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் வைபவ் மற்றும் ‘காலா’ நடிகை ஈஸ்வரிராவ் ஆகியோர் போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளனர்.
ஒரு க்ரைமை கண்டுபிடிக்கும் போலீஸ்காரர்களாக வைபவ், ஈஸ்வரிராவ் நடிக்கும் இந்த படத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ‘தெய்வமகள்’ என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை வாணிபோஜன் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜாவின் உதவியாளர் சார்லஸ் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைக்கின்றார். இந்த படத்திற்காக அவர் இரண்டு பாடல்களையும் கம்போஸ் செய்து முடித்துவிட்டாராம்.