விலகியவர்கள் எல்லாம் தளபதிகள் இல்லை: சசிகலாவை சந்தித்த பின் தினகரன் பேட்டி
தினகரனின் அமமுகவில் உள்ள பிரபலங்கள் ஒவ்வொருவராக விலகி கொண்டே இருக்கும் நிலையில் லேட்டஸ்ட்டாக இசக்கி சுப்பையா விலகியுள்ளார்.
இந்த நிலையில் இன்று பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்திய பின் தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிமுகவிற்கு போக முடிவு எடுத்த பிறகு தான் அமமுகவில் இருந்து இசக்கி சுப்பையா விலகி உள்ளார். அமமுகவில் இருந்து விலக முடிவு எடுத்த பின்பு என்னை குறை சொல்கின்றனர். அமமுகவில் இருந்து சென்றவர்கள் எல்லாம் தளபதிகள் இல்லை. அவர்கள் நிர்வாகிகள் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.