விலக்கிவைத்திருப்பதும் விடுதலையே!
கோடுகளுக்குள்ளும் வண்ணங்களுக்குள்ளும் அடங்காதவையாக இருக்கின்றன கல்கி சுப்பிரமணியத்தின் ஓவியங்கள். சமூகச் செயற்பாட்டாளர், எழுத்தாளர், நாடக நடிகர் எனப் பன்முகம் கொண்ட கல்கியின் மற்றுமொரு முகம் ஓவியர். யாரிடமும் முறைப்படி ஓவியம் கற்றுக்கொள்ளாத இவர், தான் வரைந்த ஓவியங்களை சமீபத்தில் கண்காட்சிக்கு வைத்திருந்தார். கோவையில் நடைபெற்ற கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ஈர்த்தன.
“பல்வேறு ஓவியர்களின் ஓவிய முறைகளைத் தொடர்ந்து கவனிச்சிக்கிட்டு வர்றேன். பழங்கால ஓவிய முறைகளைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறேன். அந்த அறிவு, என் ஓவியங்களை வழிநடத்துகிறது. மகிழ்ச்சி, துக்கம், கோபம், காதல் என்று அத்தனை உணர்வுகளையும் ஓவியங்கள் வாயிலாகக் கடத்துவதே என் விருப்பம். எதையும் ஒரு சட்டகத்துக்குள் அடக்கக் கூடாது என்பதற்காகவே அடர்த்தியான நிறங்களைப் பயன்படுத்துகிறேன்” என்று சொல்லும் கல்கி, திருநங்கை வரைந்த ஓவியங்கள் என்ற அடையாளத்தைத் தான் விரும்பவில்லை என்கிறார்.

“கேரளத்தைச் சேர்ந்த தோழி லதா குரியன், நான் வரைந்த ஓவியங்களைப் பார்த்துவிட்டுக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தார். என் முதல் ஓவியக் கண்காட்சி கேரளத்தில் கடந்த மாதம் நடந்தது” என்று சொல்கிறார் கல்கி.
தன் ஓவியங்கள் மூலமாக எந்தக் கருத்தையும் சொல்ல விரும்பவில்லை என்று சொல்லும் கல்கி, ஓவியங்களின் பொருள்களைப் பார்வையாளர்களின் ரசனைக்கே விட்டுவிடுகிறார்.
“எந்த விளக்கமும் தேவைப்படாமல் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் என் ஓவியங்கள் புரியணும். அவர்களைச் சிந்தக்கத் தூண்டணும். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அனுபவமா இருக்கணும். இந்த உலகத்தை, இயற்கையை, சுற்றியிருக்கிற மனிதர்களை நான் நேசிக்கிறேன். அதுவே ஓவியமா வெளிப்படுது” என்கிறார்.
மூன்றாம் பாலினம்
மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த புரிதல் தற்போது மக்களிடம் அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார் இவர். வீட்டை விட்டு ஒதுக்கிவைப்பதும், புறக்கணிப்பதும் ஓரளவு குறைந்திருந்தாலும் இன்னும் விழிப்புணர்வு தேவை என்று சொல்கிறார்.
“திருநங்கைகளின் உணர்வுகளைப் பலரும் புரிந்துகொள்வதில்லை. காதல், திருமணம், குடும்பம் இவை சார்ந்த அவர்களின் எதிர்பார்ப்புகள் எளிதாகப் புறக்கணிக்கப்படுகின்றன. உடல் ரீதியாகவும், உழைப்பு சார்ந்தும், பணத்தை முன்வைத்தும் திருநங்கைகள் சுரண்டப்படுகிறார்கள்” என்று திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்துச் சொல்கிறார்.
“இந்தச் சமூகம் மூன்றாம் பாலினம் என்பதற்காக என்னை விலக்கிவைத்திருப்பதும் நல்லதே. இந்தச் சமூகத்தில் பெண்கள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஏராளம். ஏன் அதைச் செய்தாய், ஏன் இதைச் செய்யவில்லை என்று ஆயிரமாயிரம் கேள்விகள். திருநங்கையாக இருப்பதாலேயே நான் இவற்றிலிருந்து தப்பித்து விட்டேன். சமூகத்தின் விலகலை நான் விடுதலையாக நினைக்கிறேன்” என்று புன்னகைக்கிறார். தன் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடந்த நிகழ்வுகளை மையமாக வைத்து நாவல் ஒன்றை எழுதிவருகிறார் கல்கி.