விளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவத்தில் வேலை
எஸ்.எஸ்.பி என்று அழைக்கப்படும் சசாஸ்திரா சீமா பால் படைப்பிரிவில் 355 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படும் இந்திய துணை ராணுவ பிரிவுகளில் ஒன்றான சசாஸ்திரா சீமா பால் படைப்பிரிவில் காலியாக உள்ள 355 கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த காலிப்பணியிடங்கள் கால்பந்து, தடகளம், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக், தடகளம், கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட 22 விதமான விளையாட்டுகளில் பங்கெடுத்து சாதனை படைத்தவர்களுக்கு பணிகள் உள்ளன.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு மேற்குறிப்பிட்டுள்ள விளையாட்டுகளில் அதிகளவில் வெற்றிகள் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இதில் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
தேர்வு செய்யும் முறை:
கான்ஸ்டபிள் பணிக்கான இந்த தேவில் உடல் அளவு, உடல்திறன் தேர்வுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. டி.டி. அல்லது இந்திய அஞ்சல் ஆணை, வங்கி காசோலையாக இந்த கட்டணத்தை இணைக்கலாம்.
விண்ணப்பிக்கம் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் சுய சான்றொப்பம் செய்த புகைப்படங்கள், சான்றிதழ் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
விண்ணப்பங்கள் Assistant Director (Sports) Force Hqr., Sashas tra Seema Bal (SSB), East Bloc kV, R.K.Puram, New Delhi 110066 என்ற முகவரிக்கு அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் சென்றடைய வேண்டும். அஞ்சல் முகப்பில் Application For The Post Of Constable (GD) Under Sports Quota 2016&17 & 2017&18 என்று குறிப்பிட வேண்டும்.
இதற்கான அறிவிப்பு மே 6-12 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.