விளைவுகள் தெரியாமல் விமர்சிப்பதா? ஐகோர்ட் நீதிபதி வேதனை
நீதிமன்றத்தின் தீர்ப்புகளை சமூக வலைத்தலங்களில் கடுமையாக சிலர் விமர்சிப்பதாகவும், இதனால் ஏற்படும் விளைவுகள் என்னவென்று தெரியாமலே பலர் உள்ளனர் என்றும் சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் குறித்து பிறப்பித்த உத்தரவுக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனம் வந்து கொண்டிருப்பதாகவும், விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் சார்பில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி கிருபாகரன், ‘நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரியாமலேயே பலர் விமர்சனம் செய்வதாகவும், இந்த விமர்சனங்கள் குறித்து ஆதாரத்துடன் தெரிவித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இதேபோல் ஹெல்மெட் வழக்கிலும் தனக்கு அதிகமான விமர்சனங்கள் வந்ததாக அவர் மேலும் கூறினார்,.