விவசாயக் கடன் தள்ளுபடியால் மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும்: வெளிநாட்டு ஆய்வு நிறுவனம் தகவல்
மாநிலங்கள் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யும் நடவடிக்கை களால் நிதிப் பற்றாகுறை அதிகரிக் கும் என ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் விவசாயக் கடன் தள்ளுபடி தொடரும்பட்சத்தில் 2019ம் ஆண்டு தேர்தலுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) கடன் தள்ளு படியின் மதிப்பு 2 சதவீத அளவுக்கு இருக்கும் என தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதியாக பாஜக விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது. இதை பின்பற்றி இதர மாநிலங்களும் விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவிக்க உள்ளன. இதனால் 2019ம் ஆண்டு தேர்தலுக்குள் தள்ளுபடி தொகையின் மதிப்பு ஜிடிபியில் 2 சதவீதமாக இருக்கும் வெளிநாட்டு ஆய்வு நிறுவனம் நேற்று கூறியுள்ளது.
இதுதொடர்பாக ஆய்வு நடத்தி யுள்ள பேங்க் ஆப் அமெரிக்கா மெரில்லின்ச், நேற்று ஆய்வறிக் கையை வெளியிட்டுள்ளது. இதில் 2019 ஆண்டுவரை இந்த நிலை தொட ருமானால் ஜிடிபியில் 2 சதவீதம் விவசாயக் கடன் தள்ளுபடி அளிக் கப்பட்டிருக்கும். இது இந்தியா வின் கடன் கலாசாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் முதல மைச்சர் யோகி ஆதித்யநாத், அம்மாநில விவசாயக் கடன்களை சுமார் 500 கோடி டாலர் அளவுக்கு தள்ளுபடி செய்துள்ளார். இது அம்மாநில உள்நாட்டு மொத்த மொத்த உற்பத்தியில் 0.4 சதவீத மாகும். இதர மாநிலங்களும் இந்த போக்கை கடைபிடிக்க உள்ளன. எனினும் விவசாயக் கடன் தள்ளு படியை அறிவிப்பதற்கு முன்பு மாநிலங்கள் தங்களின் நிதி நிலையில் கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மாநிலங்கள் இந்த எச்சரிக்கையை மீறும்பட்சத்தில் 3 சதவீதம் முதல் 3.5 சதவீதம் வரை நிதிப் பற்றாக்குறையை சந்திக்கும் என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. ஏற்கெனவே பல மாநிலங்கள் 3.5 சதவீதம் வரையிலான நிதிப் பற்றாக்குறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்ற கோரிக்கைகள் மஹாராஷ்டிரா, ஹரியாணா, தமிழ்நாடு போன்ற மாநிலங் களிலும் வலுப்பெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் விவசாயிகள் வாங்கி யுள்ள பயிர் கடன்களை மாநில அரசு தள்ளுபடி செய்ய வேண்டுமெனெ உத்தரவிட்டுள்ளது. இதனால் மாநில நிதி ஆதாரத்தில் சுமார் ரூ.4.000 கோடிவரையில் சிக்கல் உருவாகும்.
இந்த நடவடிக்கைகள் கவலையளிப்பதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் கடந்த வாரத்தில் தெரிவித் தார். விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது, நாம் ஒழுக்கத்துக்கு மாறான செயலை ஊக்குவிப்பதாக இருக்கும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக விவசாயக் கடன் களை தள்ளுபடி செய்பவர்கள், என். கே.சிங் கமிட்டி முன்வைத் துள்ள நிதிப் பற்றாக்குறை இலக் கிற்கு எதிராக செயல்படுவதாக இருக்கும் என்றும் ஆய்வு கூறியுள்ளது. இது குறித்து நபார்டு வங்கியும் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2018-2020ம் ஆண்டுக்குள் நிதிப் பற்றாக்குறை இடைவெளி 3 சதவீத அளவுக்குள் கட்டுப்படுத்தப்படும். 2021ம் ஆண்டுக்குள் 2.8 சதவீதத் துக்குள்ளும், 2022ம் ஆண்டில் 2.6 சதவீதமும், அதற்கடுத்த ஆண்டில் 2.5 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்படும். சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப இந்த இலக்கு எட்டப்படும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. சர்வதேச நிலவரத்தைப் பொறுத்தவரையில் நிதி பற்றக்குறை ஏற்ற, இறக்கம் இருக்கும். வரி வசூலிப்பில் முன்னேற்றமும் சரிவும் இருக்கும் என்றும் கூறியுள்ளது.