விஷன்-2023 திட்டத்தை படித்திருந்தால் கமல் உளரமாட்டார்: அமைச்சர் உதயகுமார்
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ள கமல் தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் குடிநீர் பிரச்னை உள்ளதாக கமல் நேற்று பேசிய ஒரு கூட்டத்தில் குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், ‘ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான விஷன்-2023 திட்டத்தை பற்றி முழுமையாக படித்திருந்தால் கமல் இவ்வாறு உளறி இருக்க மாட்டார்’ என்று கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசனும் அதிமுக அமைச்சர்களும் அவ்வப்போது அறிக்கைகள் மூலம் மோதிக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது