விஷாலுக்கு இருக்கும் துணிச்சல் ரஜினி, கமலுக்கு ஏன் இல்லை?
அரசியலுக்கு வரப்போவதாக பல பேட்டிகள் கொடுத்தும் , டுவிட்டுகள் போட்ட உலக நாயகன் கமல்ஹாசனும், கடவுள் அனுமதி கொடுத்தால் அரசியலுக்கு வருவேன் என்று கடந்த 25 வருடங்களாக கூறி வரும் கமல்ஹாசனும் இன்னும் அரசியலுக்கு வராது ஏன் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஊழல் எல்லா துறைகளில் அதிகபடியாக இருக்கிறது என்று முதல் பேட்டியில் தமிழ் நாட்டு அரசியில் மீது கொண்ட வெறுப்பை கமல் வெளிபடுத்தினார். அதேபோல் தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று ரசிகர்களிடையே பேசினார் ரஜினி
அதன் பிறகு அரசியல் தலைவர்கள் இருவரையும் விமர்சித்தனர். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கமலுக்கு முதுகெலும்பு இருக்கிறதா இல்லையா என்று விமர்சித்தார் .பதிலுக்கு கமலும் எச்.ராஜா எப்போது ,முதுகெலும்பு டாக்டர் ஆனார் என்று கேட்டார். அதேபோல் ரஜினி ஒரு கோழை என்று சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்தார்.
தனது பிறந்த நாளுக்கு முக்கிய அறிவிப்பை அறிவிக்கபோவதாக கூறி சமூக பிரச்சனைகளை பற்றி பேசுவதற்கு ஒரு செயலியை அறிவித்தார் விஷால் . ஆனால் அரசியலை பற்றி ஏதும் பேசவில்லை . இந்த நிலையில் விஷால் ஆர்,கே . நகர் தேர்தலில் சுயச்சையாக போட்டியிட போகிறார். விஷாலுக்கு இருக்கும் துணிச்சல் ஏன் ரஜினி, கமலுக்கு இல்லை என்று நெட்டிசகள் கேள்வி எழுப்புயுள்ளனர்.