விஷால் வேட்புமனு நிராகரிப்பு, ஏற்பு மீண்டும் நிராகரிப்பு: ஆளுங்கட்சியின் அதிரடி டிராமா
அதிமுக, திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகள் கொள்கை அளவில் எதிரிகளாக இருந்தாலும், இருவரையும் எதிர்க்கும் ஒரு பொதுவானவரை வீழ்த்த ஒன்று சேர்வார்கள் என்பது விஷால் விஷயத்தில் உண்மையாகியுள்ளது.
விஷாலின் வேட்புமனு நேற்று பரிசீலனைக்கு வந்தபோது அதிமுக, திமுக இரண்டு கட்சியினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ஆளுங்கட்சியின் தலையீட்டால் நேற்று விஷாலின் வேட்புமனு முதலில் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் விஷால் தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதம் செய்து தனது தரப்பு நியாயத்தை கூறியவுடன் அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இடையில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. மீண்டும் ஒருசில மணி நேரத்தில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் வேட்புமனுவில் கையெழுத்திட்ட சுமதி மற்றும் தீபன் ஆகியோர் தாங்கள் கையெழுத்திடவில்லை என்று கூறியதாகவும், அதனால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
ஒரு சுயேட்சை வேட்பாளரை களத்தில் மோத திராவிடகட்சிகளுக்கு தைரியமில்லை என்பதையே இது காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.