பரபரப்பு தகவல்
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆன்லைனில் தான் செஸ் விளையாட்டு நடைபெற்று வருகிறது
அந்த வகையில் ஒலிம்பியாட் செஸ் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதில் இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த் விளையாடி உள்ளார்
சமீபத்தில் இவர் ஒரு முக்கிய போட்டியில் விளையாட வேண்டிய இருந்தது. ஆனால் அன்றைய தினம் அவர் இருக்கும் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மின்சாரம் நிறுத்தப்பட்டால் விஸ்வநாதன் ஆனந்த்தால் இந்த போட்டியை விளையாட முடியாது. இதனை அடுத்து விசுவநாதன் தனக்குத் தெரிந்த உயர் அதிகாரிகளுடன் பேசி அன்றைய தினம் மின்சார நிறுத்தம் இல்லாமல் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்
இதனை அடுத்து ஆங்காங்கு உயர் அதிகாரிகள் உத்தரவு பறந்தது மின்சார வாரியம் அன்றைய தினம் போட்டி முடியும் வரை மின்சாரத்தை நிறுத்தாமல் இருந்தன. மின்சார நிறுத்தம் குறித்து முன்கூட்டியே அறிந்து ஆனந்த திட்டமிட்டதால் அந்த போட்டி தடையில்லாமல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டி முடிந்தவுடன் மின்சாரத் துறைக்கு விசுவநாதன் ஆனந்த் நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது