‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட் தள்ளுபடி

‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட் தள்ளுபடி

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு எதிராக பிரமிட் சாய்மீரா என்ற நிறுவனம் தொடுத்த வழக்கு சற்றுமுன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

கமல்ஹாசனிடம் ‘மர்மயோகி’ என்ற படத்திற்காக முன்பணமாக ரூ.4 கோடி கொடுத்ததாகவும், அந்த பணத்தை கமல் திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் அதுவரை ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்றும் பிரமிட் சாய்மீரா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தது.

ஆனால் இந்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் திட்டமிட்டபடி நாளை ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.

Leave a Reply