‘விஸ்வரூபம் 3’ இல்லை, ஆனால்…கமல் பதில்

‘விஸ்வரூபம் 3’ இல்லை, ஆனால்…கமல் பதில்

கமல்ஹாசன் நடித்து இயக்கிய ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பாராட்டுக்களை பெற்றபோதிலும் வசுல் ரீதியிலான தோல்விப்படம் என்றே திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகிஸ்தர்களும் கூறி வருகின்றனர். முதல் நாள் முதல் காட்சியிலேயே ஹவுஸ்புல் ஆகாத கமல் படம் அனேகமாக இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஸ்வரூபம் 3ஆம் வருமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘நிச்சயமாக இல்லை. ஆனால் நிஜத்தில் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறேன்’ என்று கூறினார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு அடுத்த வருடம் தான் தொடங்கவுள்ளது. ஷங்கரின் படம் வெளியாக எப்படியும் 3 வருடம் ஆகும். சபாஷ் நாயுடு படத்தையும் இப்போதைக்கு கமல் முடிக்கும் எண்ணத்தில் இல்லாததால் அடுத்த கமல் படம் இன்னும் மூன்று வருடங்களுக்கு பின்னரே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply