‘விஸ்வாசம்’ திரைவிமர்சனம்
அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை இப்போது பார்ப்போம்
தேனி அருகே உள்ள கிராமத்திற்கு டாக்டரான நயன்தாரா மெடிக்கல் கேம்ப் நடத்த வருகிறார். அப்போது அந்த ஊரில் அடாவடி, அலப்பரை செய்யும் அஜித்துடன் மோதல் ஏற்பட்டு அதன்பின் தமிழ் சினிமா வழக்கப்படி காதல் ஏற்படுகிறது. இருவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறக்கின்றது. ஆனால் அஜித்தின் தொடர்ச்சியான வன்முறையால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என் அஞ்சிய நயன்தாரா அஜித்தை பிரிந்து மும்பை செல்கிறார். பத்து வருடம் கழித்து மீண்டும் மனைவியை அழைத்து வர செல்லும் அஜித்துக்கு தனது மகள் ஆபத்தில் இருப்பதை அறிகிறார். மகளை காப்பாற்ற அவர் எடுக்கும் விஸ்வரூபம் தான் படத்தின் இரண்டாம் பாதி
அஜித்தின் இளமை மற்றும் முதுமை தோற்றம் கச்சிதமாக பொருந்தினாலும் முகம் மட்டும் டல்லாக இருக்கின்றது. ஒரே மாதிரியான வசனம் பேசும் முறையும் போரடிக்கின்றது. ஸ்டண்ட் காட்சிகளில் அடிச்சு தூள் கிளப்பும் அஜித், காமெடி மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் நெளிய வைக்கின்றார்.
கவர்ச்சி இல்லாத குடும்பத்து பெண்மணியாக முதல்பாதியிலும் தொழிலதிபராக இரண்டாவது பாதியிலும் வரும் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் இல்லை என்றாலும் அவரது அனுபவ நடிப்பு படத்திற்கு ஒரு பிளஸ்
ஜெகபதிபாபு வழக்கம்போல் ஒரு மொக்கை வில்லனாக வருகிறார். அஜித்துடன் அவர் மோதும் ஒரு காட்சி கூட மாஸாக இல்லை. தம்பி ராமையா, ரோபோசங்கர், யோகிபாபு, மற்றும் விவேக் காமெடியில் ஒன்றுகூட எடுபடவில்லை என்பது பெரிய சோகம்
சிறுமி அங்கிதா நடிப்பில் அசத்தியுள்ளார். அதேபோல் ஜெகபதிபாபு மகள் கேரக்டரிலும் நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பும் ஓகே ரகம்
இமானின் பாடல்களில் அனைத்து பாடல்களும் சூப்பர். குறிப்பாக ‘கண்ணான கண்ணே பாடல் இன்னும் பல வருடங்களுக்கு ஒலிக்கும். ஸ்டண்ட் காட்சிகளுக்கு பின்னணி இசை வேற லெவல்
அஜித் போன்ற ஒரு மாஸ் நடிகரை முழுதாக பயன்படுத்தும் அளவுக்கு திரைக்கதை இல்லாதது இயக்குனர் செய்த மிகப்பெரிய தவறு. மாஸ் திரைக்கதையுடன் இதே கதையை சூப்பராக எடுத்திருக்கலாம். கடைசியில் இயக்குனர் சொல்ல வந்த மெசேஜூக்கு மட்டும் பாராட்டுக்கள்
மொத்தத்தில் அஜித் ரசிகர்கள் மட்டுமே ரசிக்கும் வகையில் உள்ள ஒரு படம் தான் ‘விஸ்வாசம்
2.25/5