வீடியோ புதிது: போட்டோஷாப் தவறுகள்!

வீடியோ புதிது: போட்டோஷாப் தவறுகள்!

1ஒளிப்படங்களைத் திருத்தி மெருகேற்ற போட்டோஷாப் மூலம் முயற்சிக்கும்போது கவனிக்க வேண்டிய பல நுணுக்கங்கள் இருக்கின்றன. போட்டோஷாப் பயன்படுத்தும்போது செய்யக்கூடாத விஷயங்களும் இருக்கின்றன. இவை ஒளிப்படத்தின் தன்மையைப் பாழாக்கிவிடலாம். தேர்ந்த ஒளிப்படக் கலைஞர்களுக்கு இவை அத்துப்படியாக இருக்கலாம்.

ஆனால், அதிகப் பயிற்சி இல்லாமல் சுயம்புவாக போட்டோஷாப் கற்றுக்கொண்டு முயற்சி செய்பவர்களுக்கு வழிகாட்டும் வகையில், போட்டோஷாப்பில் செய்யக் கூடாத 10 விஷயங்களை ‘டுட்விட்’ இணையதள வீடியோ அடையாளம் காட்டுகிறது. பொதுவாகப் பலரும் செய்யக்கூடிய ஆனால் தவிர்க்க வேண்டிய தவறுகளை இந்த வீடியோ விளக்கத்துடன் விவரிக்கிறது. இந்தத் தளத்தில் போட்டோஷாப் நுணுக்கம் தொடர்பாக மேலும் பல வீடியோக்களைப் பார்க்கலாம்.

வீடியோவைக் காண: http://bit.ly/2fx86MX

Leave a Reply