வீடு தேடி வரும் மொபி ஸ்டோர்… இது மொபைல் சூப்பர் மார்க்கெட்!

வீடு தேடி வரும் மொபி ஸ்டோர்… இது மொபைல் சூப்பர் மார்க்கெட்!

மக்களுக்குத் தேவையான பொருட்களை முதலில் சந்தையில் சென்று வாங்குவதுதான் வழக்கம். அதன் பின்னர் நாளடைவில் மளிகைக் கடைகளின் தாக்கத்தால் சந்தைகளில் மக்கள் கூட்டம் குறையத் தொடங்கியது. ஆனால், சூப்பர் மார்கெட்களின் வரவுக்குப் பின்னர் மளிகைக் கடைகள் ஆட்டம் காணத் தொடங்கின. இப்படித்தான் சந்தையும், மளிகைக் கடைகளும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதற்கெல்லாம் காரணம், எல்லாமே ஒரே இடங்களில் கிடைக்கிறது என்று காரணம் சொல்லப்பட்டாலும், கார்ப்பரேட்டுகளின் சதியும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது, ஆனால் பெரிய பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களுக்கும், பெரிய சூப்பர் மார்கெட்களும் வீழ்ச்சியைச் சந்திக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இவற்றை வீழ்த்தப் புதிதாக ‘நடமாடும் சூப்பர் மார்க்கெட்’ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் சூப்பர் மார்க்கெட் மட்டும் வெற்றியடைந்து விட்டால் பெரும்பாலான பிரபலமான சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள் வீழ்ச்சியைச் சந்திப்பது நிச்சயம். ஒரு பெரிய சாலையின் மத்தியில் தானியங்கி வாகனம் ஒன்று ஊர்ந்து செல்கிறது. அதில் அதிகமான மளிகைப் பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன. அதன் அருகில் செல்லும் பெண் ஒருவர் செல்போன் மூலம் வரும் குறுந்தகவலை வைத்து உள்ளே செல்கிறார். அதன் பின்னர் அந்த வாகனத்தில் உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு மொபைல் மூலமே பணம் செலுத்திவிட்டு இறங்கி கொள்கிறார். ஆம், இது நடப்பது சீனாவின் ஷாங்காய் நகரில்தான். இந்தக் கடைக்கு பெயர் ‘மொபி ஸ்டோர்’.

உலகின் முதல் ‘தானியங்கி சூப்பர் மார்க்கெட்’ சீனாவின் ஷாங்காய் நகரில் முதன்முதலாக நிறுவப்பட்டுள்ளது. இன்றைக்கு சூப்பர் மார்க்கெட் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டதோ, அதுபோல, எதிர்காலத்தில் உலகின் அனைத்து நாடுகளிலும் இது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும். நடமாடும் சூப்பர் மார்க்கெட்டை வடிவமைத்தது ‘வீலிஸ் பைக் கஃபே’ என்ற நிறுவனம். இந்த சூப்பர் மார்க்கெட் மொத்தத்தில் சோலாரில் இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கும் நன்மை கிடைக்கிறது. இதுதவிர, செயற்கை உணர் தொழில்நுட்பம், ட்ரோன் டெலிவரி மற்றும் வேலை ஆட்கள் இல்லாதது என ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் அதிகமாக உள்ளன. இது சூப்பர் மார்க்கெட் எதிர்காலத்திற்கான மாடலாக கருதப்படுகிறது. இப்போது உள்ள சூழ்நிலையில் இது சாத்தியமில்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சரியாகச் சாலையில் உள்ள கோட்டின் அருகில் நின்று கொண்டால் வாகனம் நமது அருகில் வந்து நிற்கும். வாகனத்தைக் கண்டறிவதற்கு அதற்கான பிரத்யோக ஆப் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆப்பின் மூலம் வாகனம் உங்களுக்கு அருகில் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடித்து விடலாம். சோலார் உதவியுடன் வாகனம் பயணிக்க ஆரம்பிக்கும். அதைத் தொடர்ந்து ரிமோட் மூலம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்துகொண்டே இருக்கும்.

மொபி ஸ்டோர்

இதிலும் ஒரு பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. இதில் பொருட்களை வாங்கிவிடுவது அவ்வளவு எளிதானது அல்ல… உள்ளே சென்று பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் நபர் அதை செக் அவுட் கவுன்டரில் வைக்க வேண்டும். வாங்கும் பொருட்களை ட்ரோன் மூலம் அவசரமாகப் பொருட்கள் எடுத்துச் செல்ல வேண்டுமெனில் அதையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு வாகனத்திலும் நான்கு ட்ரோன்கள் இருக்கின்றன. பொருட்கள் தீர்ந்தவுடன் செயற்கை உணர் தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் பொருட்களை தானாக நிரப்பிக் கொள்ளும். இந்த வாகனம் தொடர் கண்காணிப்பில் இருப்பதால் அதனைக் கட்டுப்பாட்டு அறையில் காணமுடியும். ஒரு பொருளை மறுபடியும் நிரப்பினால்தான் அந்த வாகனம் மறுபடியும் நகர ஆரம்பிக்கும்.

இந்த வாகனத்தில் ஏற்கெனவே பார்மஸி, காபி ஷாப் மற்றும் முதலுதவி மையம் என அனைத்தையும் அமைத்து பரிசோதனை செய்திருக்கிறார்கள். இந்த வாகனத்தில் எதிர்காலத்தில் ஒரு கிளர்க்கும், ஒரு ஏ.டி.எம் மிஷினும் வரலாம். வாங்கும் பொருட்களுக்கு பணம் ஏ.டி.எம்-மில் எடுத்துக் கொள்ளலாம். ஏதேனும் உதவித் தேவைப்பட்டாலோ அல்லது சந்தேகங்கள் ஏற்பட்டாலோ உள்ளே அமர்ந்திருக்கும் கிளார்க்கிடமும் விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம். இதனை ஒருங்கிணைக்கும் வேலையை ஹிமாலையாஃபை மற்றும் ஹெஃபி யுனிவர்சிட்டி ஆகியவை பணியினை மேற்கொள்கிறது. இதன் சிறப்பம்சம் 24 மணிநேரமும் இந்த மொபி ஸ்டோர் இயங்கும்.

Leave a Reply