வீட்டிலேயே செய்யலாம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்
தேவையான பொருட்கள் :
ஸ்ட்ராபெர்ரி – 1 கப்,
பால் – 1/4 கப்,
கன்டென்ஸ்டு மில்க் – 1/2 கப்,
ஃப்ரெஷ் க்ரீம் – 1 கப்,
லெமன் ஜூஸ் – 1 டீஸ்பூன்,
சர்க்கரை – 1/4 கப்,
உப்பு – ஒரு சிட்டிகை
ஸ்ட்ராபெர்ரி எசன்ஸ் – 1 ஸ்பூன்
செய்முறை :
* பாலை நன்றாக காய்ச்சி ஆற வைக்கவும்.. அரை லிட்டர் பாலை கால் லிட்டராக சுண்ட வைக்க வேண்டும்.
* 3 ஸ்ட்ராபெர்ரியை பொடியாக நறுக்கி வைக்கவும். மீதியுள்ளதை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும். ஒரு வைப்பரால் சாஃப்டான க்ரீம் ஆகும் வரை நன்கு அடிக்கவும்.
* பிறகு ஃப்ரெஷ் க்ரீம் கலவை, கன்டென்ஸ்டு மில்க், லெமன் ஜூஸ், பால், சர்க்கரை, உப்பு, ஸ்ட்ராபெர்ரி எசன்ஸ், அரைத்த ஸ்ட்ராபெர்ரி விழுது, பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* அதை ஃப்ரிஜ்ஜில் 1 மணி நேரம் வைத்திருந்த பின் எடுத்து ஸ்பூனால் நன்கு கலக்கவும். பிறகு மீண்டும் இதை 7-8 மணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
* அதன் பின் எடுத்து பரிமாறவும்.
* குழந்தைகளுக்கு விருப்பமான குளுகுளு ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் ரெடி