வீட்டில் இருந்த பொருட்களை வெளியே எறிந்து ரகளை செய்த நிர்மலா: என்ன ஆச்சு?

வீட்டில் இருந்த பொருட்களை வெளியே எறிந்து ரகளை செய்த நிர்மலா: என்ன ஆச்சு?

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி தற்போது ஜாமீனில் உள்ளார். இந்த நிலையில் அவர் தனது வீட்டில் உள்ள பொருட்களை வெளியே எறிந்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

பேராசிரியை நிர்மலா வீட்டில் இருந்த பொருட்களை வெளியே தூக்கி எறிந்து மட்டுமின்றி கார் கண்ணாடிகளை உடைத்தும், ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நிர்மலா மனநிலை பாதிக்கட்டவரை போல நடந்து கொள்வதாகவும், அக்கம் பக்கத்தினருடன் ரகளையில் ஈடுபடுவதாகவும் போலீஸாரின் கவனத்துக்கு சென்றது. உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் நிர்மலா தேவியை கண்காணித்து வருகின்றனர்

Leave a Reply