ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் இவானா என்பவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தரும்படி நீதிமன்றத்தை நாடினார். அவர் அங்கு தாக்கல் செய்த மனுவில், “வீட்டு வேலைகள் செய்வதற்காகவே தன்னை திருமணம் செய்து கொண்டார் எனவும் இதனால் தனக்கு விவாகரத்துடன் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. மேலும், அவர் 25 வருடங்களாக தனி ஆளாக வீட்டு வேலைகளை செய்ததற்கு ரூ.1.75 கோடி அளிக்குமாறு கணவனுக்கு ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.