வீண் விவாதம், விதண்டாவாதம் செய்தவர்களுக்கு வாய்ப்பூட்டு: முக ஸ்டாலின்
அஞ்சல்துறை தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பால் நேற்று மத்திய அரசு தமிழ் உள்பட மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என அறிவித்தது. இதுகுறித்து முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக வெற்றி பெற்று என்ன சாதிக்கப் போகிறது என்று வீண் வாதம் விதண்டாவாதம் செய்தவர்களுக்கு இப்போது கிடைத்துள்ள வெற்றி, நிரந்தரமான வாய்ப் பூட்டு போடும் என்று நம்புகிறேன் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது அறிக்கையின் முழு விபரங்கள் பின்வருமாறு:
இந்தி, ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட அஞ்சல் தேர்வினை ரத்து செய்து ‘தமிழில் நடத்தப்படும்' என அறிவித்திருக்கிறார் அமைச்சர்.
இது, பாராளுன்றத்திலும், சட்டமன்றத்திலும் போராடிய திமுகவின் போர்க்குணத்திற்குக் கிடைத்த இன்னொரு வெற்றி; ‘என்ன சாதித்துவிடும் திமுக?’ என்றவர்களுக்கான வாய்ப்பூட்டு. pic.twitter.com/kC8HySiXeh
— M.K.Stalin (@mkstalin) July 16, 2019