வெடித்து சிதறியது ‘பாலி’ எரிமலை: 40000 பேர் இடமாற்றம்
பாலி நாட்டில் உள்ள அகங் என்ற எரிமலை வெடித்து சிதறி மிகப்பெரிய புகைமண்டலத்தை கக்கி வருவதால் அந்த பகுதியில் உள்ள சுமார் 40000 பேர்களை அந்நாட்டு அரசு பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்துள்ளது
பல கிலோமீட்டர் உயரத்தில் எரிமலையில் இருந்து புகை வெளிவந்து கொண்டிருப்பதால் அந்த பகுதி வழியாக செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளுக்கு செல்லவேண்டிய சுற்றுலாபயணிகள் சுமார் 2500 பேர் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.
இதே எரிமலை கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திலும் பெருமளவு புகையை கக்கியது என்பது குறிப்பிடத்தக்கது