வெர்ஜின் தீவுகளுக்கு புதிய அதிபரா? டிரம்ப் உளறலால் பரபரப்பு
வெர்ஜின் தீவுகள் ஒருங்கிணைந்த அமெரிக்க அரசின் கீழ் உள்ள பிரதேசம் ஆகும். அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப்தான் வெர்ஜின் தீவுக்கும் அதிபர். ஆனால் இதை மறந்த டிரம்ப், வெர்ஜின் தீவுகளின் ஆளுநர் கென்னெத் மேப் அவர்களை வெர்ஜின் தீவுகளின் அதிபர் என்று தவறாக குறிப்பிட்டுள்ளார். அதிபரின் இந்த உளறல் சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலும் செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று வெர்ஜின் தீவுகளின் ஆளுநர் கென்னத் மேப்பை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது மனிதர்களில் குளோனிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது பற்றிய முக்கியமான பேச்சுவார்த்தை நடந்தததாக அதிபர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன