வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-‌சி45 ராக்கெட்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-‌சி45 ராக்கெட்!

இஸ்ரோவின் ‘எமிசாட்’ செயற்கைக்கோள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-‌சி45 ராக்கெட் வெற்றிகரமாக இன்று விண்ணில் பாய்ந்தது!

அமெரிக்காவின் 24 செயற்கைக்கோள்கள், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோள் மற்றும் லுதுவேனியாவை சேர்ந்த 2 செயற்கைக் கோள்கள் என 4 நாடுகளை சேர்ந்த மொத்தம் 28 செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட்டில் உள்ளது.

இந்தியாவின் ‘எமிசாட்’ செயற்கைக்கோள் 749 கிலோ மீட்டர் தொலைவில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக எமிசாட் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply