வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறியதால் வேலைவாய்ப்பு அதிகம்:

முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிக அளவில் உள்ளதாகவும் வெளிமாநில தொழிலாளர்கள் சமீபத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வெளியேறி விட்டதால் தமிழகத்தில் அதிக அளவு வேலை வாய்ப்பு இருப்பதாகவும் காலியாக உள்ள நிலையில் வேலை வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்

கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவியது இதனை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டதால் வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் வெளியேறினர்

இதனால் தமிழகத்தில் அவர்கள் பார்த்து வந்த வேலை வாய்ப்புகள் காலியாக உள்ளன இது குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறியதால் தமிழகத்தில் வேலை காலியாக உள்ளது என்றும் அதிக அளவில் காலியாக உள்ள வேலை வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply