வெளியாகிவிட்டது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 8: என்னென்ன சிறப்பம்சங்கள்

வெளியாகிவிட்டது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 8: என்னென்ன சிறப்பம்சங்கள்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ள ஆப்பிள் ஐபோன் நிறுவனம் தனது 10வது ஆண்டை நேற்று சிறப்பாக கொண்டாடியது. இதனையடுத்து ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8பிளஸ் என இரண்டு மாடல்கள் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஐபோனில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன என்பதை பார்ப்போம்

புதிய ஐபோன் 8 சீரிஸ் 4.7 மற்றும் 5.5 இன்ச் திரை கொண்டுள்ளது. இதுவரை வெளியான ஐபோன்களில் வழங்கப்படாத அளவு ரெட்டினா HD டிஸ்ப்ளே மற்றும் அதிக உறுதியான ஹோம் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹோம் பட்டன் முன்பை விட வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ளது.

ஆப்பிள் A11 பயோனிக் சிப் கொண்டுள்ள புதிய ஐபோன் 8 சீரிஸ் இதுவரை வெளியானதில் அதிக சக்திவாய்ந்த ஐபோன் ஆகும். இத்துடன் இவை முந்தைய ஐபோன்களை விட நீண்ட நேர பேட்டரி பேக்கப் கொண்டிருக்கிறது. இத்துடன் ஐபோன் 8 ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமராவும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது

புதிய ஐபோன் 8 கேமராக்கள் குறைந்த வெளிச்சத்திலும் அதிக துல்லியமான புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டுள்ளது. மேலும் ஐபோன் 8 சீரிஸ் எந்த ஸ்மார்ட்போனும் வழங்காத அளவு துல்லியமான வீடியோ பதிவு செய்யும் வசதி மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 8 ஸ்மார்ட்போன் கிளாஸ் பேக் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது

ஐபோன் 8 ஸ்மார்ட்போன் 64 ஜிபி விலை 699 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.44,741 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் 64 ஜிபி மாடல் விலை 799 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.51,141 முதல் துவங்குகிறது. ஐபோன் 8 சீரிஸ் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply