வெள்ளைப் பணியாரம் செய்வது எப்படி?
என்னென்ன தேவை
பொன்னி பச்சரிசி – 400 கிராம்.
உளுந்து- 100 கிராம்.
சர்க்கரை – 1 டீஸ்பூன்.
உப்பு-தேவைக்கேற்ப.
எண்ணெய்- அரைகிலோ.
எப்படிச் செய்வது
பச்சரிசியையும் உளுந்தையும் ஒன்றாகக் கலந்து 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு இதனுடன் சர்க்கரை, உப்பு சேர்த்து நைசாக (சிறிது கொரகொரப்பாக) அரைத்துக்கொள்ளுங்கள். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு ஏந்தல் கரண்டியில் பணியாரம் ஊற்றுங்கள். நன்கு வெந்தவுடன் திருப்பி விட்டு உடனே எடுத்துவிடுங்கள். பணியாரம் மெதுவாக வரவில்லை என்றால் இட்லி மாவில் மேலாக ஒரு கரண்டி எடுத்து இந்த மாவுடன் சேர்த்து ஊற்றலாம். ஒரு வேளை மாவு தண்ணீராகி விட்டால் பச்சரிசி மாவு பிசைந்து சேர்த்துக் கொள்ளலாம்.