வேறு மாநிலத்தில் எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தலாமே? நீதிபதிகள் கேள்வி

வேறு மாநிலத்தில் எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தலாமே? நீதிபதிகள் கேள்வி

எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கும் போது, இத்திட்டத்தை வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் சாலைத் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய அரசு உறுதி கூறியதோடு, சாலை திட்டத்துக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று உள்ளதாகவும், இப்பணிகளுக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளதால் திட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு வாதம் செய்த நிலையில் எத்தனை பேர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்கள்? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் 8 வழிச்சாலைக்கு நிலம் கையப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக, திட்ட இயக்குனர் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ஜூலை 31-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும் வழக்கு தொடர்பாக நாளை மத்திய அரசு மனுத்தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Leave a Reply