வேலூரில் தேர்தல் ரத்தா? சத்யபிரதா சாஹூ விளக்கம்

வேலூரில் தேர்தல் ரத்தா? சத்யபிரதா சாஹூ விளக்கம்

வேலூரில் இன்று காலை சிமெண்ட் குடோன் ஒன்றில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த பணம் யாருக்கு சொந்தம்? எதற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது

இந்த நிலையில் வருமான வரித்துறை சோதனை குறித்து அந்த துறையினர்களின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், சோதனையின் முடிவில் கட்சியின் வேட்பாளருக்கு தொடர்பு இருந்தால், தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக தெரிவிக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் ரத்து குறித்து தலைமை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் இதுவரை 328 கிலோ தங்கம், 409 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.

Leave a Reply