வேலூர் தேர்தல்: தேர்தல் ஆணையத்திற்கு திமுகவின் முக்கிய கோரிக்கை
நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தலை நடத்த வேலூர் மக்களவை தொகுதியில், வாக்குப்பதிவு நாளான வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துணை ராணுவப்படை பாதுகாப்பு போட வேண்டும் என தி.மு.க. கோரியுள்ளது.
இதுதொடர்பாக வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் அலுவலரை நேரில் சந்தித்து, அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., மனு அளித்துள்ளார்.
மேலும் ஆயிரத்து 553 வாக்கு சாவடிகளையும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கவும், அதிகாரப்பூர்வமற்ற பூத்சிலிப் அ.தி.மு.க. வழங்குவதை தடை செய்வதுடன், தேர்தல் ஆணையமே பூத் சிலிப் வழங்க வேண்டும் என்றும், வாக்குப்பதிவு நாளன்று பி.எச்.இ.எல். நிறுவனத்துக்கு விடுமறை அளிக்க வேண்டும் என்றும் தி.மு.க. அளித்த மனுவில் கோரியுள்ளது.