வேலூர் தேர்தல் ரத்து வழக்கு: இன்று மாலை 6 மணிக்கு தீர்ப்பு
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று மாலை 6 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பணப்பட்டுவாடா காரணமாக வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதனை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்தார்
இந்த அவசர வழக்கை இன்று காலை விசாரணை செய்த நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று மாலை 4 மணிக்கு வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது