வருகிற 12-ந்தேதி(வியாழக்கிழமை)அன்று வேளாங்கண்ணி மாதா பேராலயம் திறக்கிறது.பக்தர்கள் பிரார்த்தனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க வாரத்தின் கடைசி 3 நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டது. அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா பேராலயம் மற்றும் நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில், நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் வாரத்தின் கடைசி நாட்களான கடந்த 6,7 மற்றும் 8-ந்தேதி ஆகிய 3 நாட்கள் மூடப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் வாசலில் நின்று தரிசனம் செய்தனர். இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம் திறக்கப்பட்டது. இதனால் திரளானோர் பேராலயத்திற்குள் சென்று பிரார்த்தனை செய்தனர். வருகிற 12-ந்தேதி(வியாழக்கிழமை)வரை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.