வைகோவின் வாதத்தை தொடர்ந்து தீர்ப்பு நிறுத்தி வைப்பா?

வைகோவின் வாதத்தை தொடர்ந்து தீர்ப்பு நிறுத்தி வைப்பா?

வைகோ மீதான தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் அளிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பில் உள்ள வாசகத்தில் பிழை உள்ளதாகவும், எனவே தனக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்றும், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நான் ஒரு போதும் கோரவில்லை என்றும் வைகோ நீதிமன்றத்தில் வாதம் செய்தார்

வைகோவின் வாதத்தை தொடர்ந்து தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இதுகுறித்து வைகோ அளித்த பேட்டியில் கூறியதாவது: இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்திய அரசு காரணம் என நான் பேசினேன். நான் பேசியதை அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் நேரில் சொன்னேன்

நான் பேசியது தேச துரோகம் அல்ல. நீதிபதி வழங்கிய தீர்ப்பை வாங்கி பார்த்தோம், அதில் குறைந்தபட்ச தண்டனை கேட்டதாக இருந்தது. எனக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது, நான் அதிகபட்ச தண்டனை தான் கேட்டேன். ஆயுள் தண்டனை என்றால் கூட மகிழ்ச்சியோடு ஏற்பேன். விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதற்காக 19 மாதம் சிறையில் இருந்தேன். நான் என் கருத்தை தொடர்ந்து விதைப்பேன், தொடர்ந்து விடுதலை புலிகளை ஆதரித்து பேசுவேன் என வைகோ தெரிவித்தார்.

Leave a Reply