வைகோ-திருமாவளவன் திடீர் சந்திப்பு!…சமாதானமா?
திமுக கூட்டணியில் வைகோவின் மதிமுக மற்றும் திருமாவளவனின் விசிக ஆகிய கட்சிகள் இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியதில் இருந்தே தமிழகத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வைகோ மற்றும் திருமாவளவன் இடையே பிளவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று திடீரென வைகோவை திருமாவளவன் சந்தித்து பல அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்
இந்த சந்திப்பு குறித்து வைகோ கூறியபோது, ‘நரேந்திர மோடி அரசுக்கு எதிராக ஒரு அலை வீசுகிறது. 2019 ல் மாநில அரசின் கூட்டமைப்புகளும் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைக்க போகிறது. இந்துத்துவா கூட்டம் உள்ளே நுழைய முடியவில்லை என்ற வெறுப்பு பாஜகவினர்களிடம் உள்ளது. திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது. 5 மாநில தேர்தல் ஜனநாயகம் காக்கப்படும் என காட்டுகிறது. மேலும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் ஏற்படுத்துகிறது”
இந்த சந்திப்பு குறித்து திருமாவளவன் கூறியபோது, ‘மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சூது, சூழ்ச்சி, கள்ளம் இல்லாதவர். கூட்டணி அமைக்கும் முன்னே திமுக உடையும் என சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் என்னாலும் வைகோவாலும் திமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது’ என தெரிவித்தார்.