வைகோ-நிர்மலா சீதாராமன் சந்திப்பு ஏன்? புதிய தகவல்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் மோடியையும் பாஜக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அவருக்கு கருப்புக்கொடி காட்டி தனது எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்து வரும் நிர்மலா சீதாராமன் அவர்களை நேற்று டெல்லியில் வைகோ சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மதிமுக இருப்பதாக கூறப்பட்டாலும், தொகுதி உடன்பாட்டின்போது கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஒருவேளை திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெறவில்லை என்றாலும், அக்கட்சி பாஜக கூட்டணியை தேர்வு செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்