வைகோ மாநிலங்களவை எம்பி ஆகமுடியுமா? திடீர் சிக்கல்

வைகோ மாநிலங்களவை எம்பி ஆகமுடியுமா? திடீர் சிக்கல்

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வைகோ தேர்வு செய்யப்படுவார் என அனைவரும் எதிர்பார்க்கப்படும் நிலையில் திமுக மீது வைகோ தொடர்ந்த ஒரு வழக்குத் தடையாக இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாலர் வைகோ பேசியது தொடர்பாக, 2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் ஜூலை 5-ஆம் தேதி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்தத் தீர்ப்பு வைகோவுக்கு பாதகமாக வரும் பட்சத்தில், மதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராவதில் அவருக்கு சிக்கல் எழும் நிலை உள்ளது.

எனவே வைகோவுக்கு பதில் மதிமுக சார்பில் வேறு வேட்பாளர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply