‘வைதேகி காத்திருந்தாள்’ பட நடிகர் காலமானார்!
இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த், ரேவதி நடித்த வைதேகி காத்திருந்தாள் என்ற திரைப்படத்தில் ரேவதியின் தந்தையாக நடித்த பிரபல குணசித்திர நடிகர் டிஎஸ் ராகவேந்திரா இன்று காலமானார்
மறைந்த டிஎஸ் ராகவேந்திரா மேற்கு கேகே நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலுக்கு திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
வைதேகி காத்திருந்தாள், விக்ரம், சிந்துபைரவி, அண்ணா நகர் முதல் தெரு, சின்னத்தம்பி பெரியதம்பி உள்பட பல படங்களில் நடித்த டிஎஸ் ராகவேந்திரா மூன்று படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது