ஷாலினிஅஜித் பிறந்த நாளை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடிய அஜித் ரசிகர்கள்

ஷாலினிஅஜித் பிறந்த நாளை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடிய அஜித் ரசிகர்கள்

அஜித்தின் மனைவி ஷாலினி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர்களும் அஜித் ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறிவந்தனர்

இந்த நிலையில் கேரளாவில் உள்ள அஜித் ரசிகர்கள் ஷாலினி பிறந்தநாளை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடினர்

அந்த வகையில் ஒரு ஆட்டோ நிறைய பிரியாணி பாக்கெட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டு அவர்கள் இருக்கும் பகுதியை சுற்றியுள்ள 10 கிலோ மீட்டருக்கு சென்று பிளாட்பாரத்தில் வாழ்பவர்கள், ஒருவேளை மட்டுமே உண்பவர்கள் ஆகியவர்களை தேடித் தேடி கண்டுபிடித்து அந்த பிரியாணி பொட்டலங்களை வழங்கியுள்ளனர்

ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படுபவர்கள் ஒரு நாளாவது திருப்தியுடன் சாப்பிட வேண்டும் என்பதே எங்கள் கொள்கை என அஜித் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அஜித் ரசிகர்களின் இந்த அர்த்தமுள்ள பிறந்தநாள் கொண்டாட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது

https://twitter.com/AfcKerala/status/1197175715906478081

Leave a Reply