ஸ்கேனில் இருந்தது 3 குழந்தை: டெலிவரி ஆனது 4 குழந்தைகள்: மருத்துவர்கள் ஆச்சரியம்
நேபாளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கர்ப்பிணியாக இருந்தபோது ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது மூன்று குழந்தைகள் இருந்தது தெரிய வந்தது. ஆனால் அவருக்கு சமீபத்தில் டெலிவரியானபோது நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது மருத்துவர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நேபாளத்தை சேர்ந்த சுனிதா என்ற 26 வயது இளம்பெண் சமீபத்தில் கர்ப்பம் ஆனார். அவர் நான்காவது மாதத்தில் ஸ்கேன் எடுத்துப் பார்த்த போது கருப்பையில் மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்
இந்த நிலையில் சமீபத்தில் அவர் டெலிவரிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டெலிவரி செய்த மருத்துவர்கள் மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளதை பார்த்து ஆச்சரியமடைந்தனர்
மூன்று குழந்தைகள் மட்டுமே ஸ்கேனில் தெரிந்த நிலையில் நான்காவதாக ஒரு குழந்தை எப்போது உருவானது என்பது மருத்துவர்களுக்கு புரியாத புதிராக உள்ளது. பொதுவாக ஒரு லட்சம் பெண்களுக்கு ஒருவருக்குத்தான் நான்கு குழந்தைகள் பிறக்கும். அந்த பட்டியலில் இந்த சுனிதாவும் சேர்ந்துள்ளார் என்பதும், 4 குழந்தைகளும் நலமுடன் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது