ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம்: 12 பேருக்கு வரிச் சலுகைகள்

ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம்: 12 பேருக்கு வரிச் சலுகைகள்

Narendra-Modi-Startup-India-standup-indiaஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மூலம் 12 தொழில்முனைவோர்களுக்கு புதுமையான தொழில்முனைவுக் குரிய வரிச் சலுகைகள் மற்றும் இதர சலுகைகள் அறிவிக்கப்பட் டுள்ளன.

இதுதொடர்பாக மத்திய தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகத் திடம் 571 தொழில் முனைவோர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர் களில் 12 பேருக்கு மட்டுமே வரி சலுகைகள் மற்றும் இதர சலுகை கள் வழங்கப்படுவதாக ஸ்டார்ட் அப் இந்தியா ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் மத்திய தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையால் கொண்டு வரப்பட்டது.

மொத்த விண்ணப்பதாரர் களில் 7 பேர் மட்டுமே ஸ்டார்ட்அப் இந்தியா சலுகைகளுக்கும் மற்ற வரிச் சலுகைகளுக்கும் உரிய ஆவ ணங்களை சமர்ப்பித்துள்ளனர். 106 நிறுவனங்கள் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித் திருந்தாலும், வரிச் சலுகை களுக்கு பொருந்தாது என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மீதம் உள்ள விண்ணப்பதாரர் களுக்கு ஸ்டார்ட்அப் மையத்தின் மூலம் உதவி செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.

மத்திய அமைச்சக குழு புதுமையான கண்டுப்பிடிப்புகள் சார்ந்த தொழில்களுக்கு மட்டுமே வரிச் சலுகைகளை வழங்கியுள் ளது. கடந்த ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி ஸ்டார்ட்அப் தொழில்களை ஊக்கப்படுத்து வதற்காக மூன்று வருடங்களுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வரிச் சலுகைகளின் காலம் உயர்த்தப் படுமா என கேட்டபோது, “வரிச் சலுகைகளுக்கான கால அவகாசத்தை மூன்று வருடத் திலிருந்து ஏழு வருடமாக உயர்த்த பரிசீலித்து வருகிறோம்” என தெரிவித்திருந்தார்.

Leave a Reply