ஸ்டாலினே எதிர்த்தாலும் ஆர்.கே.நகரில் போட்டியிட தயார்: மதுசூதனன்
திமுக செயல்தலைவர் ஸ்டாலினே போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என்று மதுசூதனன் கூறியுள்ளர்.
வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் வேட்பாளர் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
ஆர்கே நகர் தொகுதியில் டிடிவி தினகரன் மீண்டும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரை எதிர்த்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியில் போட்டியிடுவது யார்? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுசூதனன், ‘ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டால், துணை முதல் அமைச்சர் விரும்பினால் மீண்டும் நான் போட்டியிடுவேன்.
அல்லது கட்சி அறிவிக்கும் வேட்பாளருக்காக கழக பணியாற்றுவேன். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஸ்டாலினே போட்டியிட்டாலும் சந்திக்கத் தயார்.
தினகரன் மீண்டும் போட்டியிட்டால் அவரது நிலை என்ன என்று உங்களுக்கே தெரியும்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை ஒப்பந்த ஊழியர்கள் சரிவர செய்யவில்லை. அவர்கள் சரிவர பணி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று கூறினார்.,