ஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து கனிமொழி
நேற்று மாலை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வந்தார். இருவரும் தற்கால அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்தனர். காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைத்து பாஜகவை வீழ்த்த இருவரும் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபுநாயுடு முன்னெடுத்து வரும் பா.ஜனதா எதிர்ப்பு கூட்டணிக்கான முயற்சிகள் பா.ஜனதாவை பதட்டம் அடைய வைத்துள்ளது. இந்தியாவின் மதசார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டியது காலத்தின் தேவை.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளதை போல, மதவாத பா.ஜனதாவையும், ஊழல் அ.தி.மு.க.வையும் தோற்கடித்தே தீர வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.