ஸ்டாலின் சவாலை ஏற்க தயார்: ஹெச்.ராஜா
தி.மு.க தலைவராக நேற்று பொறுப்பேற்று கொண்ட மு.க.ஸ்டாலின் பேசிய தனது பேச்சில், இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா என தொண்டர்கள் மத்தியில் மு.க ஸ்டாலின் எழுச்சி உரையாற்றினார்.
இந்த உரைக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பதிலளித்துள்ளார். அந்த டுவிட்டர் பதிவில் தி.மு.க தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்றும், ஸ்டாலினின் சவாலை ஏற்க மோடியின் காவித்தொண்டர்கள் தயாராக இருப்பதாகவும் விரைவில் களம் காண்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
மோடியின் காவி தொண்டர்கள் என எச்.ராஜா குறிப்பிட்டிருப்பது மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திமுக தலைவராக @mkstalin பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சவாலை ஏற்க்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராகவே உள்ளோம். களம் காண்போம்.@KanimozhiDMK pic.twitter.com/zqRxp1Cu9C
— H Raja (@HRajaBJP) August 28, 2018