ஸ்டாலின் சுட்டு விரல் நீட்டினால் சிட்டாக பணியாற்றுவேன்: விபி கலைராஜன்
அமமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாராக இருந்த வி.பி.கலைராஜன் நேற்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் இன்று திருச்சியில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இணைந்த பின்னர் விபி கலைராஜன் கூறியதாவது: டிடிவி தினகரனுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும், அமமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் விரைவில் இணைவார்கள் என்றும் ஸ்டாலின் சுட்டு விரல் நீட்டினால் சிட்டாக பணியாற்றுவேன் என்றும் கூறினார்.
ஏற்கனவே அமமுகவில் இருந்த செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்துள்ள நிலையில் தற்போது விபி கலைராஜனும் இணைந்துள்ளது அமமுக பலவீனமாகி வருவதையே காட்டுவதாக கூறப்படுகிறது