செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் விழா காணொலி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன் கிழமை மாலை ஐந்து மணியளவில் காணொலிக் காட்சி மூலமாக சென்னை கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
திமுக (DMK) சார்பில் இந்தாண்டு நடத்தப்படும் முப்பெரும் விழாவில் பெரியார் விருது மதிவாணனுக்கும் ,அண்ணா விருது மூக்கையாவுக்கும் , கலைஞர் விருது கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த வேணுவுக்கும் , பாவேந்தர் விருது வாசுகி ரமணனுக்கும் , பேராசிரியர் விருது முபாரக்கிற்கும் வழங்கப்பட்டும் என ஏற்கனவே அறிவித்திருந்தது.