ஸ்டெர்லைட் ஆலைக்காக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்: வைகோ வலியுறுத்தல்
சமீபத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூடிய நிலையில் அதேபோல் ஸ்டெர்லைட் ஆலைக்காகவும் சிறப்புக்கூட்டம் கூட்ட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்
தமிழக அரசு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும், அமைச்சரவை கூட்டத்திலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் வைகோ தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.