தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி முடிந்துவிட்ட நிலையில் இந்த ஆலையை மீண்டும் தொடர்ந்து இயங்க ஆலை நிர்வாகம் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது
ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ச்சியாக இயங்க அனுமதிக்க முடியாது என தமிழக அரசு கூறிவிட்டது
அதுமட்டுமின்றி ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின்சாரம் நேற்று இரவு துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மின்சார உற்பத்தி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது