ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை

ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் வழங்கப்பட்ட தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

 

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்து வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம், பல்வேறு நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு அனுமதி அளித்தது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனமும், பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடைக் கோரி தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தன.

இந்த வழக்கின் விசாரணை கடந்த சில வாரங்களாக நடந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஆலையை திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையையும் நிராகரித்துள்ளது. அத்துடன் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply