ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதா? வாய்ப்பே இல்லை என்கிறார் ஆர்.கிஷோர் குமார்

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதா? வாய்ப்பே இல்லை என்கிறார் ஆர்.கிஷோர் குமார்
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்  என்று அந்த பகுதி மக்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேல் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தங்கள் நிறுவனத்தில் கமிஷன் வாங்கிய அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடவுள்ளதாக அறிவித்ததாகவும், அதன்பின்னர் பல அரசியல்வாதிகள் குரல் கொடுப்பதை நிறுத்திவிட்டதாகவும் ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது..
இந்த நிலையில்  ஸ்டெர்லைட் ஆலையின் வர்த்தக மேம்பாட்டு இயக்குநர் ஆர்.கிஷோர் குமார் அவர்கள் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை முழுமையாகச் சட்டத்துக்கு உட்பட்டுச் செயல்பட்டு வருகிறது இப்போது ஏற்பட்டுள்ள குழப்பமான நிலைக்கு சட்டத்தின் மூலம் தீர்வு காணப்படும். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை நாங்கள் தீவிரமாக கண்காணித்து, மாசு எந்த அளவில் இருக்கிறது என்பதையும் தொடர்ந்து கவனித்து வருகிறோம். மற்றும் இந்த வழக்கில் மற்ற அம்சங்களையும் கவனத்து வருகிறோம்.
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்படுவதற்கு பசுமை தீர்ப்பாயம் உள்ளிட்டவை நீண்டகாலத்துக்கு முன்பாகவே எங்களுக்கு அனுமதி தந்துள்ளன. மேலும், நிறுவனத்தின் உரிமத்தை புதுபிக்கும் காலக்கெடு முடிவதற்கு மிக முன்பாகவே, நாங்கள் அதற்குத் தமிழக அரசிடம் விண்ணப்பித்துவிட்டோம்.
ஆனால், தமிழக அரசு அதிகாரிகள் உரிமம் புதுப்பிக்கும் காலக்கெடு முடிந்தபின், பல்வேறு ஆவணங்கள் தேவை என கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.  எங்களைப் பொருத்தவரை ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடிவைத்து, உற்பத்தியை நிறுத்திவைத்து இருப்பதால், நாள் ஒன்றுக்கு 1200 டன் தாமிரம் உற்பத்தி பாதிக்கும்.
இதனால், தேவைக்கும், தாமிரத்தின் சப்ளேவுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தும். இந்த இடைவெளியைச் சமாளிக்க, மத்திய அரசு வேறுவழியின்றி, வெளிநாடுகளில் இருந்துதான் தாமிரத்தை இறக்குமதி செய்ய வேண்டியது இருக்கும். இதனால், அன்னியச்செலாவணியை அதிகமாகச் செலவு செய்ய வேண்டியது இருக்கும்.
நாட்டின் தாமிரத்தின் தேவையை நிறைவு செய்வதில் ஸ்டெர்லைட் ஆலை 3-வது இடத்தில் இருந்து வருகிறது. பல்வேறு சர்வதேச தரநிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த 2 ஆண்டுகளில் 7 சதவீதம் அளவுக்கு உயரும் எனத்தெரிவித்துள்ளன.
ஆனால், தொடர்ந்து ஆலையை மூடிவைத்து இருப்பதால், தாமிரத்தின் தேவைக்கும், சப்ளைக்கும் இடையே இருக்கமான நிலை ஏற்படும். ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கும் திட்டம் குறித்தும் மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்யப்படும். இப்போது ஏற்பட்டுள்ள ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி நிறுத்தம் என்பது, சர்வதேச தாமிர உலகில் புதிய பரிமாணத்தை உண்டாக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்

Leave a Reply