ஸ்டெர்லைட் விரிவாக்க பகுதியில் சுற்றுச்சூழல்துறை இயக்குநர் ஆய்வு
தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஸ்டெர்லைட் விரிவாக்க பகுதியில் மத்திய சுற்றுச்சூழல்துறை இயக்குநர் கலியபெருமாள், பிரின்ஸ் லால் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறமால் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதாக வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில், நேரில் ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த ஆய்வு இன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது