ஸ்டெர்லைட் விவகாரம்: மக்கள் அச்சப்பட வேண்டாம் என கலெக்டர் தகவல்

ஸ்டெர்லைட் விவகாரம்: மக்கள் அச்சப்பட வேண்டாம் என கலெக்டர் தகவல்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க இன்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில் இதுகுறித்து தூத்துகுடி பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என தூத்துகுடி கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும், மக்கள் எந்த விதமான அச்சமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் கூறிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி * சட்டம் ஒழுங்கு தொடர்பாக காவல்துறையினருடன் ஆலோசித்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்

மேலும் சட்டம், ஒழுங்கு பாதிக்கும் வகையில் மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எந்தவிதமான போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Leave a Reply