ஸ்டெர்லைட் விவகாரம்: வேதாந்தா நிறுவனம் கேவியட் மனு தாக்கல்

ஸ்டெர்லைட் விவகாரம்: வேதாந்தா நிறுவனம் கேவியட் மனு தாக்கல்

தூத்துகுடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்றும், அதற்கு தேவையான மின் இணைப்பை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்க வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் பசுமை தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. எனவே வேதாந்தா நிறுவனத்தின் கருத்தை கேட்காமல் உச்சநீதிமன்றம் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply